சினிமா செய்திகள்

அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்திய ரஜினி!

Published

on

நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்துள்ள ரஜினி, நடிகர் அஜித்தை பாராட்டியுள்ளார்.

எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த படம் நேர்கொண்ட பார்வை இந்த படத்தின் தலைப்பை அஜித்தை வைத்து பல படங்கள் இயக்கிய இயக்குனர் சிவா தேர்ந்தெடுத்தார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து வித்யாபாலன், ஷ்ரத்தா, ஸ்ரீநாத், அபிராமி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருகிறது. இந்நிலையில் இந்த படத்தை பார்த்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அஜித்துக்கு தொடர்பு கொண்டு அவரை பாராட்டியுள்ளார்.

இதனால் அஜித் ரசிகர்களும் படக்குழுவினர்களும் உற்சாகத்துடன் இருக்கின்றார்கள்.

seithichurul

Trending

Exit mobile version