சினிமா

அண்ணாத்த பட வசூல் எதிரொலி!… சம்பளத்தை குறைத்த ரஜினி…

Published

on

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான திரைப்படம் அண்ணாத்த. இப்படம் 2020 தீபாவளிக்கு ரிலீஸ் என திட்டமிடப்பட்டு கொரோனா காரணமாக 2021 தீபாவளிக்கு அதாவது ஒருவருடம் தள்ளி வெளியானது. இந்த வகையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு சில கோடிகள் நஷ்டம் ஏற்பட்டது.

இப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 2ம் தேதி வெளியானது. பல மாதங்களுக்கு பின்பு தியேட்டர்கள் திறக்கப்பட்டது, விஜய், அஜித் போன்ற நடிகர்களின் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை மற்றும் தீபாவளிக்கு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால் மக்கள் இப்படத்தை காண தியேட்டருக்கு சென்றனர். எனவே, முதல் 4 நாட்கள் இப்படம் நல்ல வசூலை பெற்றது. ஆனால், எதிர்மறையான விமர்சனங்கள் மற்றும் மழை காரணமாக இப்படத்தின் வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டது.

குறிப்பாக, அதிக வசூலை பெறும் சென்னையில் கனமழை காரணமாக அதிகமான கூட்டம் தியேட்டர் பக்கம் செல்லவில்லை. பல தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யப்படது. இதனால் அண்ணாத்த படத்தின் வசூல் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு கால்ஷீட் கொடுத்துள்ளார் ரஜினி. புதிய படத்திற்கு அவருக்கு ரூ.70 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ரஜினி ரூ.100 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் அடுத்த படத்தை கார்த்திக் சுப்பாராஜ் இயக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version