தமிழ்நாடு

நான் ஏன் அப்படி கூறினேன் என்றால்? காஷ்மீர் விவகாரம் குறித்து ரஜினி விளக்கம்!

Published

on

காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு காஷ்மீரை இரண்டாக பிரித்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் பாராட்டுக்களை தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த். இந்நிலையில் இந்த பாராட்டு குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த 11-ஆம் தேதி துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், காஷ்மீர் விவகாரத்தில் துணிச்சலாக முடிவெடுத்த அமித்ஷாவை பாராட்டினார். பிரதமர் மோடியையும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் மகாபாரதத்தில் வரும் அர்ஜுனர், கிருஷ்ணர் என ஒப்பிட்டுப் பேசினார். இது தமிழக அரசியலிலும், தமிழ் ஊடகங்களிலும் விவாதமாக மாறியது.

இந்நிலையில் சென்னை போயஸ் கார்டனில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், காஷ்மீர் பிரச்சினை என்பது நமது பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் தாய் வீடாக இருக்கிறது. எதை அரசியல் ஆக்க வேண்டும் எதை அரசியலாக்க கூடாது என்று மதிப்புக்குரிய சில அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று விளக்கம் அளித்தார்.

Trending

Exit mobile version