சினிமா

பாலிவுட் இயக்குனருடன் கை கோர்க்கும் ரஜினி? – இது செம கூட்டணி

Published

on

ரஜினியின் நடிப்பில் உருவான அண்ணாத்த தீபாவளிக்கு வெளியானது. அவரின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

தேசிங்கு பெரியசாமி, கார்த்திக் சுப்பாராஜ், நெல்சன், கே.எஸ். ரவிக்குமார் என பட்டியல் நீண்டது. சந்திரமுகி போல் மீண்டும் ஒரு மாஸ் ஹிட் படத்தை கொடுக்க வேண்டும். சிறந்த கதையை தேர்ந்தெடுக்க வேண்டும் என ரஜினி விரும்புகிறாராம். எனவே, அவர் கே.எஸ்.ரவிக்குமார் பக்கம் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தற்போது அவரை ஒரு பாலிவுட் பட இயக்குனர் இயக்க வாய்ப்பிருப்பதாக செய்திகள் செய்திகள் கசிந்துள்ளது. பாலிவுட் Cheeni kum, shamitabh உள்ளிட்ட சில படங்களை இயக்கியவர் பாலகிருஷ்ணன். சுருக்கமாக அவரை பால்கி என அழைப்பார்கள். ஷமிதா படத்தில் அமிதாப்புடன் இணைந்து தனுஷும் நடித்திருந்தார்.

இவர் சமீபத்தில் ரஜினியை சந்தித்து ஒரு கதையை கூறியுள்ளார். அது ரஜினிக்கு மிகவும் பிடித்துப்போக தற்போது அடுத்தகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் ஒருவர் தயாரிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version