தமிழ்நாடு

திருநாவுக்கரசருடன் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு.. என்ன காரணம்?

Published

on

சென்னை: தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசருடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு நடத்தி உள்ளார்.

சென்னை அண்ணா நகரில் உள்ள திருநாவுக்கரசர் இல்லத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் சவுந்தர்யாவின் திருமணத்திற்காக திருநாவுக்கரசுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதற்காக இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கடந்த டிசம்பரில் நடிகரை ரஜினிகாந்தும், திருநாவுக்கரசரும் அமெரிக்காவில் இருக்கும் போது சந்திப்பு நடத்தி ஆலோசனை செய்தார்கள் என்று உறுதிப்படுத்தாத தகவல்கள் வந்தது. இந்த நிலையில் தற்போது இந்த சந்திப்பு நிகழ்ந்து இருக்கிறது.

seithichurul

Trending

Exit mobile version