சினிமா

அண்ணாத்த டீமுக்கு தங்க சங்கிலி பரிசளித்த ரஜினி -வைரல் புகைப்படங்கள்…

Published

on

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான திரைப்படம் அண்ணாத்த. இப்படம் அண்ணன் – தங்கை செண்டிமெண்ட் காட்சிகள் நிறைந்த படமாக வெளிவந்தது.

இப்படத்தில் ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். தீபாவளிக்கு வெளியான இப்படம் எதிர்மறை விமர்சனங்களை தாண்டி நல்ல வசூலை பெற்றது. ஆனால், மழை காரணமாக படத்தின் வசூல் பாதிக்கப்பட்டது. இதனால் அப்செட்டில் இருக்கிறார் ரஜினி என ஏற்கனவே செய்திகள் வெளியானது.

மேலும், இப்படத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை என்பதால் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு அடுத்த படத்தையும் நடித்து கொடுக்க வேண்டிய கட்டாயம் ரஜினிக்கு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

அண்ணாத்த வெளியாகி இன்றோடு 50 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், நடிகர் ரஜினி வெளியிட்ட ஆடியோவில் ‘எதிர் மறை விமர்சனங்கள் மற்றும் மழையை தாண்டி அண்ணாத்த படம் வெற்றி அடைந்துள்ளது. மழை இல்லை எனில் அண்ணாத்த படம் இன்னும் பெரிய வெற்றியை பெற்றிருக்கும். நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான். ஆனால், கைவிடமாட்டான். ரசிகர்களுக்கு நன்றி’ என தெரிவித்துள்ளார்.

மேலும், அப்படத்தில் பணிபுரிந்த படக்குழுவினரை ரஜினி தனது வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு தங்க சங்கிலி அணித்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். இதில், இயக்குனர் சிவா, அப்படத்திற்கு இசையமைத்த இமான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version