சினிமா செய்திகள்

தியேட்டர்களை திருமண மண்டபங்களாக மாற்றிய ரஜினி ரசிகர்கள்!

Published

on

ரஜினியின் பேட்ட படம் வெளியாகி 90களில் பார்த்த பழைய ரஜினியை கார்த்திக் சுப்பராஜ் ரசிகர்களுக்கு காட்டி விருந்து படைத்துள்ளார். இந்நிலையில், சென்னையில் ஒரு ரசிகரும் தஞ்சயில் ஒரு ரசிகரும் தியேட்டரிலேயே தங்களது திருமணத்தை செய்து ரசிகர்களுக்கு திருமண விருந்தையும் கொடுத்த ஆச்சர்ய சம்பவங்களும் நடந்துள்ளன.

 

தியேட்டர்களில் அஜித் ரசிகள்கள் செய்த களேபரங்களை பார்த்தோம். அதே போல பேட்ட ரிலீசை முன்னிட்டு ரஜினி ரசிகர்களும் கொண்டாட்ட திருவிழாக்களாக தியேட்டர்களை மாற்றினர். ஆனால், இதுவரை அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ரஜினி ரசிகர்களால் நிகழ்ந்ததாக தகவல் வெளியாகவில்லை.

ஆனால், அதற்கு மாறாக தாம்பரத்தை அடுத்துள்ள படப்பையை சேர்ந்த அன்பரசு எனும் தீவிர ரஜினி ரசிகர், சென்னை உட்லண்ட்ஸ் தியேட்டரில் இன்று அதிகாலை உறவினர்கள் புடை சூழ தனது திருமணத்தை தியேட்டரிலே புரோகிதர் மந்திரம் முழங்க செய்துள்ளார். மேலும், படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு விருந்தையும் கொடுத்து அசத்தியுள்ளார். பின்னர் படம் ரிலீசான பிறகு தனது மனைவி காமாட்சியுடன் விசிலடித்து படம் பார்த்தார்.

இதே போல தஞ்சையை சேர்ந்த ரஜினி ரசிகர் ஜோதி ராமனும் தனது திருமணத்தை தஞ்சை சாந்தி தியேட்டரில் செய்து அசத்தியுள்ளார். மேலும், மனைவி உஷாவுடன் இணைந்து தலைவர் தரிசனத்தை பார்த்தது வாழ்வில் மறக்க முடியாத தருணம் எனத் தெரிவித்தார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version