சினிமா செய்திகள்

’அண்ணாத்த’ ரிலீஸ் எதிரொலி: ஒரு தோசை ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்த ரஜினி ரசிகர்!

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் ரஜினி ரசிகர் ஒருவர் தனது ஹோட்டலில் ஒரு ரூபாய்க்கு ஒரு தோசை விற்பனை செய்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான திரைப்படம் ’அண்ணாத்த’. இந்த படம் தீபாவளி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்திற்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரஜினி ரசிகர்கள் ’அண்ணாத்த’ படத்தை பார்க்க பெரும் ஆர்வத்துடன் உள்ள நிலையில் தீபாவளி அன்று ’அண்ணாத்த’ திரைப்படம் வெளியாக இருப்பதை அடுத்து அந்த படத்தை வரவேற்கும் விதமாக திருச்சியை சேர்ந்த ரஜினி ரசிகர் ஒருவர் தான் நடத்திவரும் ஓட்டலில் ஒரு ரூபாய்க்கு ஒரு தோசை என்று விற்பனை செய்து வருகிறார்.

இன்று ஒரு நாள் மட்டும் இந்த சலுகை ’அண்ணாத்த’ பட ரிலீசுக்காக தான் செய்வதாக அவர் பேட்டியளித்துள்ளார். தீபாவளி என்ற உணவகம் விடுமுறை விடுமுறை என்பதால் இன்று தீபாவளி பொருட்களை வாங்க வரும் மக்களுக்காக இந்த சலுகை அளிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு ரூபாய்க்கு ஒரு தோசை என்ற தகவல் அறிந்ததும் அந்த பகுதியில் உள்ள மக்கள் அவரது கடையில் மிகுந்த ஆர்வத்துடன் தோசைகளை சாப்பிட்டு ’அண்ணாத்த’ திரைப்படம் வெற்றி அடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version