தமிழ்நாடு

அன்றே சொன்ன ரஜினி: கொரோனா 2வது அலையை கணித்ததால் தப்பிய ரசிகர்கள்!

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வருவேன் என்று கூறிவிட்டு கட்சி தொடங்குவதற்கான அனைத்து பணிகளையும் செய்து கொண்டிருந்தார். அதன் பின்னர் திடீரென உடல்நிலையை காரணம் காட்டி அவர் அரசியலுக்கு வரவில்லை என்று கூறினார்.

மேலும் இரண்டாவது மிக வேகமாக பரவி வருவதை அடுத்து தன்னை நம்பி வரும் ரசிகர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை என்று சொன்னார். ரஜினியின் இந்த முடிவுக்கு அவரது ரசிகர்களே பலர் கண்டனம் தெரிவித்தனர் என்பது தெரிந்ததே.

ஆனால் இன்று கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதை பார்க்கும் போது ரஜினி அன்றே சொன்னது மிகச் சரியானது என்று தெளிவாக புரிய வந்துள்ளது. ரஜினிகாந்த் ஒருவேளை அரசியலுக்கு வந்து பிரச்சாரம் செய்து இருந்தார் என்றால் அவருக்காக கோடிக்கணக்கான ரசிகர்கள் களத்தில் இறங்கி வேலை செய்திருப்பார்கள். அவர்களில் பலர் தற்போது கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். ஆனால் ரஜினி அரசியலுக்கு வராததால் அவரது ரசிகர்கள் அனைவரும் தற்போது பாதுகாப்பாக நலமுடன் உள்ளனர்.

தனக்கு பதவி கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை தன்னுடைய ரசிகர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வரும் முடிவை தவிர்த்த ரஜினிக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ‘அன்றே சொன்னார் ரஜினி’ என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தனக்கு பதவி வேண்டும் மக்கள் எக்கேடு கெட்டு போனாலும் பரவாயில்லை என்று பிரச்சாரம் செய்த அரசியல் தலைவர்கள் மத்தியில் தன்னலம் கருதாது ரசிகர்களை காப்பாற்றிய ரஜினிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version