தமிழ்நாடு

ரஜினி அரசியலுக்கு வராமல் போனது துரதிஷ்டமே: குருமூர்த்தி

Published

on

ரஜினி அரசியலுக்கு வராமல் போனது துரதிஷ்டம் என்று தனியார் நாளிதழ் விவாத நிகழ்ச்சியில் துக்ளக் குருமூர்த்தி கூறியுள்ளார்.

திமுக, அதிமுக ஆகிய இரண்டு திராவிட கட்சிகளை ரஜினியால் வீழ்த்தி இருக்க முடியும் என்றும் ஆனால் அவரது உடல்நிலை அவருக்கு ஒத்துழைப்பு தராததால் அவரால் அரசியல் கட்சியை தொடங்க முடியவில்லை என்றும் இது உண்மையிலேயே ஒரு துரதிர்ஷ்டம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ரஜினிகாந்த்தை நான் அரசியலுக்கு இழுப்பதாக ஒரு சிலர் கருதுகின்றனர். ஆனால் ஒரு கட்சியை உருவாக்கி அதை வழி நடத்துவது எவ்வளவு கடினம் என்பது நான் அவருக்கு வழிகாட்டினேன். இதனை அடுத்து தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் அரசியலுக்கு வரும் முடிவை கைவிட்டார். அவரது குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்கள் எடுத்த முடிவுதான் இது.

ரஜினிகாந்த் தமிழகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று உண்மையிலேயே ஆசையுடன் இருந்தார். ஆனால் அவரது உடல்நிலையை அவரை அரசியலில் நுழைய அனுமதிக்காதது தமிழக மக்களின் துரதிர்ஷ்டம். அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் அடிப்படையில் ஒரே மாதிரியான கொள்கை உடையது தான். ரஜினிகாந்த் அரசியலுக்கு வ்ந்திருந்தால் கண்டிப்பாக ஒரு மாற்றத்தை உருவாக்கி இருப்பார், இருப்பினும் ரஜினி அரசியலை விட்டு விலகினாலும் அவரது மனநிலை வெளிப்படையாக நிம்மதியாக இருந்தாலும் விரும்பியதைச் செய்ய முடியவில்லையே என்று அவர் சோகமாக இருக்கிறார். கண்டிப்பாக அவரை ஏதாவது தமிழக மக்களுக்கு செய்வார் என்று குருமூர்த்தி தெரிவித்தார்.

seithichurul

Trending

Exit mobile version