தமிழ்நாடு

தேர்தல் தோல்விக்காக ராகுல் காந்தி பதவிவிலக தேவையில்லை: ரஜினிகாந்த்!

Published

on

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது. பாஜக தனித்து 303 இடங்களை கைப்பற்றியது. ஆனால் காங்கிரஸ் கட்சியால் 52 இடங்களில் தான் வெற்றிபெற முடிந்தது. இதனையடுத்து ராகுல்காந்தி தோல்விக்கு பொறுப்பேற்று தனது தலைவர் பதவியை ராஜினாமா என கேள்வி எழும்பியது.

இதனையடுத்து தேர்தலுக்கு பின்னர் கூடிய காங்கிரஸ் காரியகமிட்டி கூட்டத்தில் ராகுல்காந்தி தனது ராஜினாமா கடிதத்தை அளித்ததாகவும், ஆனால் காரிய கமிட்டி அதனை நிராகரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மோடி வெற்றிபெற்றதற்கு வாழ்த்து கூறிய நடிகர் ரஜினிகாந்த் ராகுல்காந்தி பதவி விலகல் விவகாரத்தில் கருத்துதெரிவித்துள்ளார்.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த். அப்போது, கட்சி தொடங்கி 14 மாதங்களில் கமல்ஹாசன் கணிசமான வாக்குகளை வாங்கியதற்கு பாராட்டுகள் தெரிவித்தார் ரஜினி தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தோல்வி பற்றியும் கூறினார்.

காங்கிரஸ் பழமையான ஒரு கட்சி. அதில் இருக்கும் மூத்த தலைவர்களை இளைஞரான ராகுல் காந்தி இன்னும் சிறப்பாக கையாண்டிருக்க வேண்டும். தேர்தல் தோல்விக்காக ராகுல் காந்தி பதவிவிலக தேவையில்லை என கூறினார் ரஜினிகாந்த்.

seithichurul

Trending

Exit mobile version