தமிழ்நாடு

ஆகம விதிகளை மீறி அத்திவரதரை தரிசித்த ரஜினிகாந்த்?

Published

on

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 வருடங்களுக்கு பின்னர் அத்திவரதர் நீரிலிருந்து நிலத்துக்கு வந்து அருள் பாலிக்கிறார். அவரை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் காஞ்சியை நோக்கி படையெடுக்கின்றனர். அத்திவரதை பார்க்க பொதுமக்கள் கால்கடுக்க பலமணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

அத்தி வரதரை பார்க்க குடியரசுத்தலைவர், முதல்வர் என பல முக்கியமானவர்கள் வந்து சந்தித்து சென்றுள்ளனர். இந்நிலையில் சயன கோலத்தில் காட்சி அளித்த அத்தி வரதர் ஆகஸ்ட் 1-ஆம் தேதி எழுந்து நின்று காட்சி அளிக்கிறார். காஞ்சிபுரம் அத்தி வரதர் நின்ற கோலத்தில் ஆகஸ்ட் 17 வரை பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

அத்திவரதர் உற்சவத்தின் 45-வது நாளான நேற்று முன்தினம் இளஞ்சிவப்பு பட்டாடையில் ராஜமகுடம் அணிந்தவாறு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிலையில் நின்ற கோலத்தில் வசந்த மண்டபத்தில் வீற்றிருந்த அத்தி வரதரை நடிகர் ரஜினிகாந்த் தன் மனைவி லதாவுடன் நள்ளிரவு 12.30 மணிக்கு தரிசனம் செய்தார். ஆகஸ்ட் 17-ம் தேதியுடன் அத்திவரதர் தரிசனம் முடியவிருக்கும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தரிசனம் மேற்கொண்டார்.

இந்நிலையில் நள்ளிரவு 12.30 மணிக்கு ரஜினிகாந்த் அத்தி வரதரை தரிசனம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆகம விதிகளின்படி நள்ளிரவில் கோயில்களில் வழிபாடு நடத்தக்கூடாது. இதனை ரஜினிகாந்த் மீறியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அத்தி வரதரை நள்ளிரவில் ரஜினிகாந்த் தரிசனம் செய்துள்ளதாக செய்திகள் வருகிறது. அரசியல் சட்டத்தை மதிக்காதவர்களுக்கு ஆகம விதியெல்லாம் கணக்கு இல்லை என்றார்.

Trending

Exit mobile version