சினிமா

இன்னொரு பாசமலராக உருவாகும் ‘அண்ணாத்த’ – வெளிவராத தகவல்

Published

on

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா, குஷ்பு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ளது. வரும் தீபாவளிக்கும் இப்படம் வெளியாகவுள்ளது.

annaatthe Rajini

சமீபத்தில் இப்படத்தின் போஸ்டரும் வெளியாகி வரவேற்பை பெற்றது. பைக்கை ஓட்டிக்கொண்டு கையில் அரிவாளை ரஜினி பிடித்திருப்பது போன்ற காட்சி போஸ்டரில் இடம் பெற்றிருந்தது. இதைப்பார்க்கும் போது அண்ணாத்த ஒரு பக்கா ஆக்‌ஷன் கதை என்பது போல் தோன்றும். ஆனால், அதில் உண்மையில்லை. படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் இருக்கிறது.

keerthi suresh

ஆனால், அதை விடவும் அழுத்தமான அண்ணன் – தங்கை செண்டிமெண்ட் காட்சிகள் இருக்கிறதாம். ரஜினியின் தங்கையாக கீர்த்திசுரேஷ் நடித்துள்ளார். இத்தனைக்கும் இப்படத்தில் கீர்த்திசுரேஷ் ரஜினியின் உடன் பிறந்த தங்கை கிடையாதாம்.

Step sister என அழைக்கப்படும் அப்பாவின் மற்றொரு மனைவிக்கு பிறந்த மகளாம். ஆனாலும், அவர் மீது அதீத பாசம் கொண்டவராக ரஜினி நடித்துள்ளாராம். மொத்தத்தில் இப்படம் ஒரு நவீன பாசமலராக உருவாகியுள்ளதாம்.

அதோடு, நடிப்பில் பட்டையை கிளப்பியிருக்கிறாராம் கீர்த்தி சுரேஷ்…

Trending

Exit mobile version