தமிழ்நாடு

“ரஜினி – கமல் இணைய வேண்டும்!”- தமிழக அமைச்சர் விருப்பம்

Published

on

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன், 2021 ஆம் ஆண்டு நடக்கும் சட்டசபைத் தேர்தலில் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அவர்கள் இருவரும் இணைய வேண்டும் என்ற ரீதியில் கருத்து தெரிவித்துள்ளார் தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ.

கமல், தனது தேர்தல் பிரச்சாரத்தை முழு வீச்சில் செய்து கொண்டு வருகிறார். பல்வேறு மாவட்டங்களுக்குப் பயணம் செய்யும் கமல், தமிழகத்தின் ஆளுங்கட்சியான அதிமுகவுக்கு எதிராக கறார் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். குறிப்பாக தன்னை எம்.ஜி.ஆருடன் இணைத்துப் பேசி வருகிறார். இதனால் உஷ்ணமடைந்த அதிமுகவினர், கமலுக்கு எதிராக பேசி வருகின்றனர்.

இதையொட்டி அமைச்சர் கடம்பூர் ராஜூ, ‘கமலுக்கு அரசியல் என்றால் என்னவென்றே தெரியாமல் பேசி வருகிறார். அவரின் கருத்துகளுக்கெல்லாம் என்னால் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. ரஜினியும் கமலும் இணைவது ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ரஜினியும் கமலும் இணைந்து திரைப்படத்தில் நடித்தால் வேண்டுமானால் ரசிகர்கள் விரும்புவார்கள். ஆனால், அரசியலில் அவர்கள் இணைய வேண்டுமென்றால் அதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

 

 

Trending

Exit mobile version