தமிழ்நாடு

ரஜினியும் கமலும் மோடியின் கூட்டாளிகள்: திருமாவளவன் அதிரடி!

Published

on

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக வெற்றிபெற்றதற்கு வாழ்த்து கூறிய நடிகர் ரஜினிகாந்த், தமிழகத்தில் தற்போது கரிஷ்மாட்டிக் தலைவர் யாரும் இல்லை என கூறினார். மேலும் மோடியை கரிஷ்மாட்டிக் தலைவர் என புகழ்ந்தார். இதற்கு விசிக தலைவர் தொல் திருமாவளவன் தற்போது பதில் அளித்துள்ளார்.

சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவனிடம் தமிழகத்தில் தற்போது கரிஷ்மாட்டிக் தலைவர்கள் யாரும் இல்லை என ரஜினி கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், தமிழக அரசியல் வரலாற்றில் எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா இருந்த காலத்திலேயே இவ்வளவு பெரிய மகத்தான வெற்றியை எந்த அணியும் பெற்றதில்லை. அதிகபட்சம் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் தேனியைத் தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெற்றிருக்கிறது.

இவ்வளவு பெரிய வெற்றியை பார்த்தபின்னும் திமுக கூட்டணியை அங்கீகரிக்க, ஸ்டாலின் தலைமையை பாராட்ட மனமில்லாமல் ரஜினிகாந்த் போன்றவர்கள் இப்படிப்பட்ட கூற்றை சொல்லியிருப்பதாக நான் கருதுகிறேன். மோடி எதிர்ப்பு அரசியலை முன்வைத்து 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளோம். இது ரஜினியின் கவனத்துச் சென்றதா என்று தெரியவில்லை என்றார்.

இதனையடுத்து செய்தியாளர்கள் மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, ரஜினியும் கமலும் ஒருவருக்கொருவர் கவர்ச்சி அரசியலை பாராட்டிவருகிறார்கள். அந்த கவர்ச்சி அரசியலை மோடி தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைக்கலாம். மோடிக்கு இருக்கும் கவர்ச்சியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ரஜினியும் கமலும் கருதுவார்கள் என்றார்.

மேலும் ரஜினியும் கமலும் மோடியின் கூட்டாளிகள், அவருடைய டீமைச் சேர்ந்தவர்கள் என்று கூறுகிறார்களே என்ற கேள்விக்கு, அது உண்மையாக இருக்கலாம் என்று பதிலளித்தார் திருமாவளவன்.

seithichurul

Trending

Exit mobile version