தமிழ்நாடு

கமல் கட்சியில் இணைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்தவர்!

Published

on

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியை கடுமையாக விமர்சனம் செய்தவர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் கூட்டணி நடத்த பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

பாமகவின் முக்கிய நிர்வாகியாக இருந்த ராஜேஸ்வரி திடீரென அக்கட்சியிலிருந்து விலகி அனைத்து மக்கள் அரசியல் கட்சி என்ற தனி கட்சியை ஆரம்பித்தார். இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் அமைத்துள்ள புதிய கூட்டணியில் தனது அனைத்து மக்கள் அரசியல் கட்சியை கூட்டணிக்காக இணைக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நேற்று தனது நிர்வாகிகளுடன் கமல்ஹாசனை சந்தித்தார் என்பதும் இது இந்த பேச்சுவார்த்தையின் முடிவு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது கமல்ஹாசன் நடத்திய நிகழ்ச்சியை கடுமையாக விமர்சனம் செய்த ராஜேஸ்வரி தற்போது அவருடைய கட்சியிலேயே கூட்டணி வைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கூட்டணியில் ராஜேஸ்வரியின் அனைத்து மக்கள் அரசியல் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

 

seithichurul

Trending

Exit mobile version