தமிழ்நாடு

ராஜேந்திர சோழன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்: முதல்வர் அறிவிப்பு

Published

on

மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளார்

தமிழக முதல்வராக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு அதிரடி அறிவிப்பு வெளியாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தஞ்சை பெரிய கோவிலை கட்டியவரும் சோழ பேரரசின் மாமன்னருமான ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன் உலகின் பல பகுதிகளை போரிட்டு வென்று தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த நாளான ஆடி திருவாதிரை தினம் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. அந்தவகையில் மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்த தினமான ஆடி திருவாதிரை தினத்தை அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்

மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என பல்வேறு தரப்பினர் தொடர்ந்து பல ஆண்டு காலமாக வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது முதலமைச்சர் முக ஸ்டாலின் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இது ராஜேந்திர சோழனுக்கு செய்யும் மிகப்பெரிய மரியாதை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் தெரிவித்துள்ளார். ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடுவது நம் வரலாற்றின் மைல்கல் என்று அமைச்சர் தங்கம்தென்னரசு தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version