தமிழ்நாடு

ஜாமீனில் வெளியே வந்தார் ராஜேந்திர பாலாஜி: என்னென்ன நிபந்தனைகள்!

Published

on

முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நேற்று சுப்ரீம் கோர்ட் ஜாமீன் அளித்த நிலையில் சற்று முன்னர் அவர் திருச்சி சிறையிலிருந்து வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆவின்பால் துறையில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி மோசடி செய்தார் என முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையில் அவரை கைது செய்ய காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

20 நாட்களாக இந்தியாவின் பல பகுதிகளில் தேடிய காவல்துறையினர் அதன்பின் பெங்களூரில் ராஜேந்திர பாலாஜியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு சென்னை ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த ஜாமீன் மனு விசாரணையின்போது ராஜேந்திரபாலாஜி கைது செய்யப்பட்ட விதம் குறித்து அதிருப்தி தெரிவித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பின்னர் ராஜேந்திரபாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜேந்திரபாலாஜி விருதுநகர் தவிர்த்து வேறு பகுதிகளுக்கு செல்ல கூடாது என்றும் காவல் நிலையத்தில் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்த நீதிபதிகள் அவருக்கு ஜாமின் அளித்தனர். இதனையடுத்து ராஜேந்திரபாலாஜி விடுதலை செய்வதற்கு உண்டான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் சற்று முன் அவர் திருச்சி மத்திய சிறையில் இருந்து வெளியே வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜேந்திரபாலாஜி ஜாமீனில் வெளிவந்த அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version