தமிழ்நாடு

அதிமுக – பாஜக இடையிலான ஒற்றுமை என்ன தெரியுமா..?- ராஜேந்திர பாலாஜி சொன்ன ‘அடடே’ விளக்கம்

Published

on

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை பாஜக, அதிமுகவோடு கூட்டணி வைத்து சந்திக்கிறது. கூட்டணிக் கட்சியான பாரதிய ஜனதாவுக்கு, அதிமுக தரப்பில் 20 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதன்படி வரும் சட்டசபைத் தேர்தலில் பாஜக, திருவண்ணாமலை, நாகர்கோயில், குளச்சல், விளவன்கோடு, ராமநாதபுரம், மொடக்குறிச்சி, துறைமுகம், ஆயிரம்விளக்கு, திருக்கோயிலூர், திட்டக்குடி, கோயம்புத்தூர் தெற்கு, விருதுநகர், அரவக்குறிச்சி, திருவையாறு, உதகமண்டலம், திருநெல்வேலி, தளி, காரைக்குடி, தாராபுரம், மதுரை வடக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

பல்வேறு தொகுதிகளில் அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்கள், வேட்பு மனுவைத் தாக்கல் செய்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ‘நமக்கும் பாஜகவுக்கு என்ன ஒற்றுமை என்று கேட்கிறார்கள். நாமும் ஆன்மிகவாதிகள். அவர்களும் ஆன்மிகவாதிகள். அது தான் இருவருக்கும் இடையிலான ஒற்றுமையாகும். 

அதிமுக தேர்தல் அறிக்கையில் இலவச வாஷிங் மெஷின் கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அது சாத்தியமா என்பதையும், பட்ஜெட்டில் அதற்கு நிதி ஒதுக்க முடியுமா என்பதையும் கணக்கில் கொண்டே திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்காக திட்டம் தீட்டி, அதை செயல்படுத்தும் ஒரே கட்சி அதிமுக தான்’ எனப் பேசியுள்ளார். 

seithichurul

Trending

Exit mobile version