தமிழ்நாடு

இராஜபாளையம் தொகுதியில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி படுதோல்வி: அதிர்ச்சியில் தொண்டர்கள்!

Published

on

தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழக அமைச்சர்கள் சிலர் எதிர்பாராத வகையில் பின்னணியில் இருந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். அவ்வாறு ஆரம்பம் முதலே பின்னடைவில் இருந்தவர்களில் ஒருவர் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜபாளையம் தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட இவர் ஆரம்பம் முதலே பின்னடைவில் இருந்து வந்தாலும் இடையில் சில மணி நேரங்கள் மட்டும் முன்னிலையில் இருந்தார். ஆனால் தற்போது அங்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ராஜேந்திரபாலாஜி தோல்வி அடைந்துள்ளார்.

இந்த தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட தங்கபாண்டியன் அவர்கள் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜபாளையம் தொகுதியில் அதிமுக வெற்றி பெறும் என்று உறுதியாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அவர் தோல்வி அடைந்துள்ளது அதிமுக தொண்டர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version