சினிமா செய்திகள்

பிப்ரவரிக்கு தள்ளிப்போன வந்தா ராஜாவாதான் வருவேன் படம்!

Published

on

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படம் வரும் பிப்ரவரி 1ம் தேதி வெளியாகவுள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

பொங்கல் ரேஸில் தல மற்றும் தலைவருடன் மோதப்போவதாக அறிவித்த சிம்பு, திடீரென பின்வாங்கினார். ஜன.,26ம் தேதி ஆவது படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 1ம் தேதிக்கு தள்ளிப்போயுள்ளது.

தெலுங்கில் பவர்ஸ்டார் பவண்கல்யாண் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான அந்தாரண்டிகி தாரேதி படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் மற்றும் கேத்தரின் தெரசா நடித்துள்ளனர்.

தெலுங்கில் நதியா நடித்திருந்த ரோலில் தமிழில் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். மேலும், பிரபு, ரோபோ ஷங்கர், மகத் என வழக்கமாக சுந்தர்.சி படத்தில் வருவது போல நட்சத்திர பட்டாளே இந்த படத்தில் நடித்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version