கிரிக்கெட்

90 ரன்களில் சுருண்ட ராஜஸ்தான்: மும்பைக்கு ரன்ரேட் எகிற வாய்ப்பு

Published

on

ஐபிஎல் தொடரின் இன்றைய 51வது போட்டியில் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய நிலையில் மும்பை அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 90 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடக்க ஆட்டக்காரர் லீவிஸ் மட்டுமே 24 ரன்கள் எடுத்தார் என்பதும் அதன் பின் வந்த பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்பியதால் ராஜஸ்தான் அணி கட்டுப்படுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மும்பை அணியின் நாதன் நைல் அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளையும் நீஷம் 3 விக்கெட்டுகளையும் பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் 91 என்ற எளிய இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் மும்பை அணி பேட்டிங் செய்ய உள்ளது. இந்த போட்டியில் மும்பை அணி 20 ஓவர்களில் இந்த இலக்கை எட்டிவிட்டால், அந்த அணியின் ரன் ரேட் எகிறும் என்பதும், அது அடுத்த சுற்றுக்கு செல்வதற்கு மும்பை அணிக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியின் முடிவில் மும்பை அணி 5வது இடத்திற்கு செல்லுமா? அல்லது ரன் ரேட் அடிப்படையில் நான்காவது இடத்திற்கு செல்லுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Trending

Exit mobile version