கிரிக்கெட்

கடைசி ஓவரில் 2 சிக்ஸர்கள் அடித்த மோரிஸ்: ராஜஸ்தான் த்ரில் வெற்றி

Published

on

நேற்று நடைபெற்ற டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவை என்ற நிலையில் ராஜஸ்தான் அணியின் மோரிஸ் மிக அபாரமாக 2 சிக்சர்கள் அடித்து தனது அணிக்கு வெற்றியை தேடி தந்தார்

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்ததை அடுத்து டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்து 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரிஷப் பண்ட் அபாரமாக விளையாடி 51 ரன்கள் எடுத்தார்

இதனையடுத்து 148 என்ற இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணியின் முதல் 4 விக்கெட்டுகள் சொற்ப ரன்களுக்கு விழுந்துவிட்டன. இதனையடுத்து களமிறங்கிய டேவிட் மில்லர் மிக அபாரமாக விளையாடி 62 ரன்கள் அடித்தார். கிறிஸ் மோரிஸ் கடைசி நேரத்தில் தனது அணியின் வெற்றிக்காக 18 பந்துகளில் 36 ரன்கள் எடுத்ததே வெற்றிக்கு வித்தாக அமைந்தது

கடைசி ஓவரில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவை என்ற நிலையில் இரண்டு சிக்ஸர்களுடன் 14 ரன்கள் அடித்த கிறிஸ் மோரிஸ் தனது அணியின் வெற்றியை உறுதி செய்தார். இந்த போட்டியின் ஆட்டநாயகனாக உனாகட் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று பஞ்சாப் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version