உலகம்

இலங்கை தாக்குதலுக்கு காரணம் ராஜபக்சே தான்: பகீர் குற்றச்சாட்டு!

Published

on

கடந்த ஈஸ்டர் பண்டிகை அன்று இலங்கையில் கொழும்புவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை குறிவைத்து தொடர் குண்டிவெடிப்பு சம்பவங்கள் நடைப்ற்றது. இந்த தற்கொலைப்படை தாக்குதல் உலக அளவில் பெரும் அதிர்வலைகளையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

காரணம் இந்த கொடூர தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் என 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 500-க்கும் அதிகமானோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த தாக்குதல்களுக்கு காரணம் ராஜபக்சே சகோதரர்கள் தான் என இலங்கையின் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா பகீர் குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், ஈஸ்டர் பண்டிகை அன்று தாக்குதல் நடத்திய தேசிய தௌஹீத் ஜமாத்தை போன்று பல்வேறு இஸ்லாமிய குழுக்களை ​கோத்தபய ராஜபக்சேவும், அவரது சகோதரரான மகிந்த ராஜபக்சேவுமே உருவாக்கினர். தமிழ், முஸ்லீம் மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தவே இவ்வாறான குழுக்களை அவர்கள் உருவாக்கினர். சிங்கள பௌத்த நாடான இலங்கையை மாற்றியமைக்க யாராவது முயற்சி செய்தால், இனப்படுகொலை செய்தாவது நாட்டை பாதுகாக்க தயங்க மாட்டேன் என அவர் கூறினார்.

seithichurul

Trending

Exit mobile version