தமிழ்நாடு

அடுத்த 3 மணி நேரத்திற்கு வெளியே போக வேண்டாம்: கொட்டப்போகுது கனமழை!

Published

on

தமிழகத்தில் உள்ள 21 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் அதனால் பொதுமக்கள் தேவை இன்றி வெளியே செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு காரணமாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் வங்கக்கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version