தமிழ்நாடு

இன்னும் 3 மணி நேரத்தில் கொட்டப்போகுது கனமழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

Published

on

தமிழகத்தில் இன்னும் மூன்று மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வந்தது என்பதும் தற்போதுதான் மழை ஓரளவுக்கு குறைந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மழை குறைந்துள்ளதால் மீண்டும் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் ஓரிரு நாட்களாக மழை பெய்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் சற்று முன்னர் தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் ஆகிய 11 மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

 

Trending

Exit mobile version