தமிழ்நாடு

அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் கன மழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Published

on

அடுத்த மூன்று மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கனமழை பெய்து வருகிறது என்பதும் அவ்வப்போது வானிலை ஆய்வு மையம் கனமழை குறித்த எச்சரிக்கை விடுத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் சற்று முன் அடுத்த மூன்று மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 14 மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என அறிவித்துள்ளது.

மேற்கண்ட 14 மாவட்டங்கள் உள்பட மொத்தம் 23 மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

seithichurul

Trending

Exit mobile version