தமிழ்நாடு

13 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Published

on

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதும் அதனால் தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி உள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் வங்கக்கடலில் தோன்றியுள்ள புயல் காரணமாக ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் மிக கனமழை பெய்யும் என ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என அறிவித்துள்ளது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, தென்காசி, திருச்சி, சேலம், நாமக்கல், கோவை, ஈரோடு, தர்மபுரி, திருவண்ணாமலை, நீலகிரி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என்றும் மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் வடக்கு கடலோர மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் உள் மாவட்டங்களிலும் நாளை ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.

மேலும் மத்திய மேற்கு கடல் பகுதியில் நிலவும் புயல் காரணமாக 50 கிலோ மீட்டர் முதல் 60 கிலோ மீட்டர் வரை வேகத்தில் காற்று வீச வாய்ப்பிருப்பதாகவும் இடையிடையே 70 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோர பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version