தமிழ்நாடு

3 ஆண்டுகளில் பெய்த மழையை விட ஒரே நாளில் பெய்த மழை அதிகம்: வானிலை இயக்குனர்!

Published

on

கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் பெய்த மழையில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழைதான் அதிகம் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும், அடுத்த இரண்டு நாட்களுக்கு கடலோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலின் தென்பகுதி மற்றும் இலங்கை கடற்பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக தெரிவித்த அவர், கடந்த 24 மணி நேரத்தில் மூன்று இடங்களில் அதிக மழையும், நான்கு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், 70 இடங்களில் கன மழையும் பதிவாகி உள்ளதாக குறிப்பிட்டார். அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 31 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக அவர் தெரிவித்தார்.

அடுத்து வரும் இரண்டு தினங்களை பொறுத்தவரையில் நாளை மறுநாள் 28ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

மேலும் அடுத்த இரண்டு நாட்களில் கனமழை பெய்யும் என்பதால் கடலூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version