தமிழ்நாடு

இன்றுடன் முடிவுக்கு வருகிறது மழை: தமிழ்நாடு வெதர்மேன் சொல்லும் தகவல்

Published

on

சென்னையில் இன்றுடன் மழை முடிவடைவதாகவும், ஒரு சில நாட்கள் இடைவெளிக்கு பின்னர் மீண்டும் செப்டம்பர் மாதம் மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது என்பது தெரிந்ததே. குறிப்பாக சென்னையில் கடந்த இரண்டு தினங்களாக விடிய விடிய மழை பெய்தது என்பதும் இதனால் சென்னையின் தற்போதைய தட்பவெப்பநிலை ஊட்டி கொடைக்கானல் போல் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கனமழை காரணமாக சென்னையில் உள்ள பல இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அவர்கள் தனது பேஸ்புக் பக்கத்தில் சென்னையில் இன்றுடன் முடிவடைந்தது என்றும், சிறிய இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் செப்டம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளார்.

அதே போல் வால்பாறை, கூடலூர், கன்னியாகுமரி, தேனி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்ரும், திருப்பூர் மற்றும் திண்டுக்கல்லில் கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகம் போலவே கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் சோளிங்கநல்லூரில் 101 மி.மீ. மழையும், சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் 87 மி.மீ.மழையும் உத்தண்டியில் 65 மி.மீ. மழையும், சோளிங்கநல்லூர் அலுவலகத்தில் 62 மி.மீ. மழையும் கேளம்பாக்கத்தில் 61 மி.மீ.மழையும். வளசரவாக்கத்தில் 55 மி.மீ மழையும், அயனாவரத்தில் 53 மி.மீ.ரும் எம்ஜிஆர் நகரில் 52 மழையும் பதிவாகியிருந்தது.

அது போல் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 10 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. திருக்கழுகுன்றத்திலும் 10 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. நீலகிரியில் 87 மி.மீ மழையும் கோவையில் சின்னக்கல்லூரில் 76 மி.மீ மழை பதிவாகி உள்ளது என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version