தமிழ்நாடு

சென்னையில் விடிய விடிய மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

Published

on

சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்துள்ளதை அடுத்து சென்னை மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்

வெப்பச்சலனம் காரணமாகவும் தென்மேற்கு பருவமழை காரணமாகவும் கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. மேலும் சென்னை வானிலை ஆய்வு மையம் ஒவ்வொரு நாளும் எந்த பகுதியில் மழை பெய்யும் என்பது குறித்த விவரங்களையும் தெரிவித்து வருகிறது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் நேற்று சென்னை உள்பட 6 நகரங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்ததையடுத்து சென்னையில் நேற்று இரவு மழை தொடங்கிவிட்டது. தென்மேற்கு பருவக்காற்று காரணமாக சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சென்னை கிண்டி, போரூர், வடபழனி, நுங்கம்பாக்கம், கோயம்பேடு ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்து உள்ளதாகவும், மயிலாப்பூர், அடையாறு, பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், அனகாபுத்தூர் ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்து உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. சென்னையின் புறநகர் பகுதிகளான ஆவடி, பூந்தமல்லி, செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழை பெய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல் இன்றும் சென்னையில் சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் சென்னையில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வருவதாகவும், இதனால் இந்த ஆண்டு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version