தமிழ்நாடு

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மழை: 3 மணி நேரத்தில் 33 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

Published

on

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மழை: 3 மணி நேரத்தில் 33 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் லேசானது முதல் மிதமான மழை பெய்து வரும் நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது .

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் முப்பத்தி மூன்று மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பூர், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய பகுதிகளில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்யும் என்றும் அதேபோல் ராமநாதபுரம், தென்காசி, நெல்லை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது .

மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகை மாவட்டங்களில் மிதமானது முதல் லேசான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல் மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளகுறிசி, கரூர், சேலம், தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பூர் மாவட்டங்களில் இன்னும் ஒருசில மணி நேரத்தில் நல்ல மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரை ஆர்.ஏ, புரம், எம்ஆர்சி நகர், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் தற்போது நல்ல மழை பெய்து வருகிறது. அதே போல் தேனாம்பேட்டை, மந்தைவெளி, மயிலாப்பூர், அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் சாலையில் மழைநீர் தேங்கியுள்ளது .

வங்கக் கடலில் உருவாகியுள்ள அசானி புயல் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை என்ற அறிவிப்பு கோடை வெயிலால் தத்தளித்துக் கொண்டிருந்த பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

seithichurul

Trending

Exit mobile version