தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் வெளுக்க போகும் கனமழை!

Published

on

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கன மழை வெளுத்து கட்டப் போவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கடந்த சில மாதங்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் சற்று முன்னர் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது காரணமாக தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய தீவிர கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய பகுதிகளிலும் இன்று மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது

நாளை துக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் அதேபோல் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்,புதுச்சேரி ஆகிய பகுதிகளிலும் கன மழையும் மிதமான மழையும் பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version