தமிழ்நாடு

இன்றும், நாளையும் மழை பெய்யும் மாவட்டங்கள்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

Published

on

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். சென்னை வானிலை ஆய்வு மையம் தினந்தோறும் அன்றைய தேதியில் மழை பெய்யும் மாவட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் மாவட்ட குறித்த அறிவிப்பை சற்று முன் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி ஆகிய இரண்டு மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தேனி, திண்டுக்கல், தென்காசி, மாவட்டங்களிலும், வடக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் நாளை அதாவது ஜூலை 29 ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை கோவை நீலகிரி மற்றும் கடலோர மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் கனமழை நீடிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரை இன்னும் ஓரிரு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில பகுதிகளில் மட்டும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகவும் அறிவித்துள்ளது.

மேலும் வடக்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளில் மிக வேகமாக காற்று வீசும் வாய்ப்பிருப்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version