தமிழ்நாடு

தமிழ்நாட்டில் மீண்டும் தொடங்கும் கனமழை- சென்னையின் வானிலை நிலவரம் என்ன?

Published

on

தமிழ்நாட்டில் மீண்டும் கனமழை தொடங்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

பருவமழை மற்றும் வெப்பச் சலனத்தின் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் ஆங்காங்கே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த சூழலில் வருகிற ஆகஸ்ட் 7-ம் தேதி தமிழகத்தில் கனமழை பெய்ய உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த இரண்டு நாட்களுக்கு சேலம், கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய பகுதிகளில் நல்ல மழைப் பொழிவுக்கு வாய்ப்பு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதே நேரத்தில் தலைநகர் சென்னையைப் பொறுத்த வரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலோர மாவட்டங்களில் இடி மின்னல் உடன் கூடிய மழை பெய்யும் என்றும் அரபிக் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் பலமாக இருக்கும் என்பதால் தென்மேற்கு, வடக்கு மற்றும் மத்திய மேற்கு ஆகிய பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் புவியரசன் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version