இந்தியா

பிளாட்பாரம் டிக்கெட் ரூ.50ஆக உயர்வு: உயர்வுக்கு ரயில்வே நிர்வாகம் அளித்த விளக்கம்!

Published

on

சமீபத்தில் குறுகிய தூர ரயில் கட்டணத்தை உயர்த்திய ரயில்வே நிர்வாகம் தற்போது கட்டணம் ரூபாய் 50 என உயர்த்தி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் ’கொரோனா காலத்தில் கூட்டத்தை தவிர்க்கும் வகையில் ஒரு சில ரயில் நிலையங்களில் மட்டும் பிளாட்பார கட்டணம் ரூ.50 என உயர்த்தப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக மும்பை கோட்டத்தில் உள்ள 78 ரயில் நிலையங்களில் 7 ரயில்களில் மட்டும்தான் பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் ரூபாய் 50 என உயர்த்தப்பட்டு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறுகிய காலத்திற்கு மட்டுமே இந்த கட்டண உயர்வு இருக்கும் என்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு நிலவரம் சரியான பின் மீண்டும் பிளாட்பாரம் டிக்கெட் குறைக்கப்படும் என்றும் முக்கியமான ரயில் நிலையங்களில் பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்ப்பதற்காகவே இந்த பிளாட்பார கட்டணம் உயர்த்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் 10 ரூபாயாக இருந்த பிளாட்பார கட்டணம் 50 ரூபாய் என உயர்ந்துள்ளது மிகவும் அதிகம் என்றும் இதனை உடனடியாக ரயில்வே நிர்வாகம் வாபஸ் வாங்க வேண்டும் என்றும் பயணிகள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. இருப்பினும் முக்கிய ரயில் நிலையங்களில் மட்டும் தான் இந்த பிளாட்பார கட்டண உயர்வு என்பது ஆறுதல் அளிக்கக்கூடிய வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version