இந்தியா

ரயில்களை வாடகைக்கு எடுத்து கொள்ளலாம்: ரயில்வே துறை அறிவிப்பு!

Published

on

ரயில்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ள அனுமதி உண்டு என மத்திய ரயில்வே துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய அரசுக்கு பெரும் வருமானத்தை தரும் ரயில்வேத்துறை மிகச் சிறப்பாக இயங்கி வருகிறது என்பதும் உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக இந்தியன் ரயில்வே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனியார் சுற்றுலா நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகளின் சுற்றுலா நிறுவனங்கள் ரயில்களை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தனியார் சுற்றுலா நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகளின் சுற்றுலா நிறுவனங்கள் ரயில்களை வாடகைக்கு எடுக்க ஆன்லைன் பதிவு கட்டணம் ரூபாய் ஒரு லட்சம் என்றும் கூடுதல் வசதிகளை பயன்படுத்த ரூபாய் ஒரு கோடி வைப்பு தொகை செலுத்த வேண்டும் என்றும் மத்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

ரயில்களை வாடகைக்கு எடுத்து சுற்றுலா நிறுவனங்கள் சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அதேபோல் மாநில அரசுகளும் பல்வேறு சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்து ரயில்களை வாடகைக்கு எடுத்து கொள்ளலாம் என்பதால் சுற்றுலா பயணிகளுக்கு இது பெரும் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடதக்கது.

seithichurul

Trending

Exit mobile version