இந்தியா

ரயில்வே தேர்வு தேதி அறிவிப்பு: ஹால்டிக்கெட் டவுன்லோட் செய்வது எப்படி?

Published

on

இந்திய ரயில்வே வாரியத்தின் இரண்டாம் கட்ட தேர்வு குறித்த அறிவிப்பை ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது.

5ம் நிலை பதவிகளுக்கு ஜூன் 12ம் தேதியும், 2ம் நிலை பதவிகளுக்கு ஜூன் 13ம் தேதியும், 3ம் நிலை பதவிகளுக்கு ஜூன் 14ம் தேதியும் புவனேஸ்வர், பிலாஸ்பூர், சண்டிகர், கோரக்பூர், மும்பை, முசாபர்பூர், ராஞ்சி, செகந்திராபாத் ஆகிய இடங்களில் தேர்வு நடைபெற உள்ளது.

அதேபோல் 5ம் நிலை பதவிகளுக்கு ஜூன் 15ம் தேதியும், 2ம் நிலை பதவிகளுக்கு ஜூன் 16ம் தேதியும், 3ம் நிலை பதவிகளுக்கு ஜூன் 17ம் தேதியும் அஜ்மீர், போபால், சென்னை, குவகாத்தி, பாட்னா, பெங்களூர், ஜம்மு-ஸ்ரீநகர், கொல்கத்தா, சிலிகுரி, அகமதாபாத், அலகாபாத், மால்டா, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் தேர்வுகள் நடைபெறும்.

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பம் செய்தவர்கள் www.rrbcdg.gov.in என்ற இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை தேர்வுக்கு நான்கு நாட்கள் முன் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

தேர்வு குறித்த விபரங்கள் விண்ணப்பதாரர்களின் செல்போன் எண்ணிற்கு எஸ்எம்எஸ் மூலமும் அனுப்பப்படும். மேலும் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட முகவரிக்கும் தேர்வு குறித்த முழு விபரங்கள் அனுப்பப்படும் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version