இந்தியா

ரயில் கட்டணம் ரூ.50 வரை உயர வாய்ப்பு.. அதிர்ச்சியில் பயணிகள்.. என்ன காரணம்?

Published

on

விமான பயணம் செய்யும் போது எப்படி விமான நிலைய மேம்பாட்டுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறதோ, அதுபோல இனி ரயில் நிலையங்களுக்கு ரயில் நிலையம் மேம்பாட்டுக் கட்டணம் வசூலிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எனவே விரைவில் ரயில் நிலையங்களில் மேம்பாட்டு கட்டணமாக 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை வசூலிக்கப்படலாம். இதனால் ரயில் பயணம் செலவு கூடும். அதாவது ரயில் டிக்கெட் கட்டணம் அதிகரிக்கும்.

இந்த ரயில் நிலைய மேம்பாட்டுக் கட்டணம் எல்லா ரயில் நிலையங்களுக்கும் இருக்காது. ஆனால் எந்த ரயில் நிலையங்களில் எல்லாம் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுகின்றனவோ அதற்கு ஏற்றவாறு இந்த கட்டணம் மாறும் எனக் கூறப்படுகிறது.

மேலும் இந்த ரயில் நிலைய மேம்பாட்டுக் கட்டணம் ஏசி வகுப்பில் பயணிப்பவர்களுக்கு 50 ரூபாய், ஸ்லீப்பட் வகுப்பு பயணிகளுக்கு 25 ரூபாய், முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்களுக்கு 10 ரூபாய் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ரயில் நிலையம் மேம்பாட்டுக் கட்டணம் புறநகர் ரயில்களில் பயணம் செய்யும் போது இருக்காது எனவும் ரயில்வே போர்டு தெரிவித்துள்ளது.

இவை மட்டுமல்லாமல் இப்படி மேம்பாட்டுப் பணிகள் நடைபெறும் ரயில் நிலையங்களின் பிளாட்ஃபார்ம் டிக்கெட் கட்டணம் 10 ரூபாய்க்கும் கூடுதலாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version