இந்தியா

ரயில் கட்டணம் உயர வாய்ப்பு.. அதிர்ச்சியில் பயணிகள்!

Published

on

விரைவில் ரயில் டிக்கெட் கட்டணம் உயர்த்த வாய்ப்புள்ளதாக வெளியான தகவல் பயணிகளிடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரயில் நிலையங்களைச் சர்வதேச தரத்தில் உயர்த்த முடிவு செய்துள்ள, இந்தியன் ரயில்வேஸ் அதற்காக ரயில் நிலையம் பயன்பாட்டுக் கட்டணத்தை டிகெட் கட்டணத்துடன் சேர்த்து வசூலிக்க முடிவு செய்துள்ளது.

இந்தியா முழுவதும் 7000 ரயில் நிலையங்கள் உள்ள நிலையில், முதற்கட்டமாக அவற்றில் 15 சதவீத ரயில் நிலையங்களில் (1000) மட்டும் இந்த பயன்பட்டு கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

அதன்படி, பயணிகளில் அதிகளவில் கூடும் ரயில் நிலையங்களில் இந்த கட்டணம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ரயில் டிக்கெட் கட்டணத்துடன் பயன்பாட்டுக்கா கட்டணமும் இணைக்கப்படலும், டிக்கெட் கட்டணத்தில் பெரிய மாறுதல் இருக்காது என்று இந்தியன் ரயில்வேஸ் தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version