இந்தியா

ரயில் பயணியிடம் தண்ணீர் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.5 வசூலிப்பு.. அபராதம் விதித்த ரயில்வே நிர்வாகம்!

Published

on

ரயில் பயணங்கள் செய்யும் போது நம்மில் பலர் ரயில் நிலையங்கள் அல்லது ரயிலில் வரும் விற்பனையாளரிடம் தண்ணீர் பாட்டில் வாங்கி இருப்போம்.

இந்த தண்ணீர் பட்டில்களை ஒரு லிட்டருக்கு 15 ரூபாய்க்கும் கூடுதலாக ரயில் பயணிகளுக்கு விற்பனை செய்யக் கூடாது என்பது விதிமுறை.

ஆனால் சில ரயில் நிலையங்களில், ரயில்களில் இந்த விதிகள் சரியாகப் பின்பற்றுவதில்லை.

சென்ற வியாழக்கிழமை, ஷிவம் பட் என்பவர் சண்டிகரிலிருந்து ஷாஜன்பூருக்கு ரயில் பயணமாகச் சென்றுள்ளார். அப்போது அவர் வாங்கிய தண்ணீர் பாட்டிலுக்கு தினேஷ் என்ற நபர் 20 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். 15 ரூபாய் வாங்க மறுத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டு வைரலாகி வந்த நிலையில், ரயிவே சட்டம் 144(1) கீழ் சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு 1 லட்சம் ரூபாயை அபராதமாக அம்பாலா ரயில் மண்டலம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதே போன்று நீண்ட நாட்களாக டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் வாங்கும் போது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

அது குறித்து தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்து இருந்தும், பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் வாங்கும் போஹ்டு 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறைந்தபாடில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version