உலகம்

ராஜஸ்தான் முதல்வர் யார்?.. இன்று சஸ்பென்ஸ் உடைக்கும் ராகுல் காந்தி

Published

on

ஜெய்ப்பூர்: இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியால் ராஜஸ்தான் மாநில முதல்வர் தேர்வு செய்யப்பட இருக்கிறார்.

ராஜஸ்தானில் ஆட்சி புரிந்த வசுந்தரா ராஜேவின் பாஜக பெரும் தோல்வியை தழுவி இருக்கிறது. ராஜஸ்தானில் உள்ள 199 இடங்களில் 99 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. 73 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.a

பகுஜன் சமாஜ் 6 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 இடங்களிலும்,  19 தொகுதிகளில் மற்ற கட்சிகளும் வெற்றி பெற்றுள்ளது. இங்கு பகுஜன் சமாஜ் மற்றும் சுயேட்சைகள் உதவியுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ளது. அங்கு ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு இடங்களே தேவை.

இந்த நிலையில் ராஜஸ்தானில் காங்கிரஸ் முதல்வர் யார் என்ற குழப்பம் நீடித்து வந்தது. காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என கூறப்பட்டது. இவருக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவும் நிறையவே இருந்தது.

Trending

Exit mobile version