கிரிக்கெட்

ஐபிஎல் அதிரடி மன்னன் ராகுல் திவாட்டியாவுக்கு எங்கேஜ்மன்ட், வருங்கால மனைவியுடனான புகைப்படத்தைப் பகிர்ந்தார்

Published

on

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் ராகுல் திவாட்டியாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இது குறித்தான புகைபடத்தைத் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ராகுல்.

ராகுலுக்கு நேற்று முன் தினம் எங்கேஜ்மன்ட் நடந்துள்ளது. அவர் இது குறித்தான செய்தியை சமூக வலைதளங்களில் பகிர்ந்த உடனேயே, அவருக்கு வாழ்த்துகள் குவிந்தன.

கடைசியாக ராகுல், அரியானா அணிக்காக சையத் முஷ்தக் அலி டிராஃபியில் விளையாடினார். அந்த அணி தொடரில், காலிறுதி வரை சென்றது. 27 வயதாகும் ராகுல், அடுத்ததாக ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ளார்.

சென்ற ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் தன் அசாத்திய பேட்டிங் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் ராகுல். குறிப்பாக தோனி போன்று ஹெலிகாப்ட்டர் ஷாட் ஆடி, அசர வைத்தார்.

மேலும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், ஷெல்டன் கோர்டல் வீசிய ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்து அதிரடி காட்டினார். அப்போதிலிருந்து அவர் எப்போது களத்திற்கு பேட்டிங் செய்ய வந்தாலும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version