இந்தியா

மனைவியை மதியுங்கள் மோடி: ராகுல் காந்தி நெத்தியடி பதில்!

Published

on

ரஃபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் ஊழல் நடந்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து பிரதமர் மோடி மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

நாடாளுமன்றத்தில் இது தொடர்பான விவாதத்தின் போது பேசிய ராகுல் காந்தி, 56 இன்ச் மார்பு கொண்ட பிரதமர் மோடி மக்கள் நீதிமன்றத்துக்கு வராமல் தப்பி ஓடிவிட்டார். மோடியை பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாதுகாப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும், நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ரஃபேல் விவகாரத்தில் இருந்து தப்பிக்க பிரதமர் மோடி ஒரு பெண்ணின் பின்னால் ஒளிந்துகொண்டிருக்கிறார் என்று நிர்மலா சீதாராமனை குறிப்பிட்டுப் பேசினார். இதனையடுத்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி இதற்கு பதில் அளித்தார்.

நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் ரஃபேல் குறித்து பதில் அளித்துள்ளார். நாட்டில் முதன் முறையாக ஒரு பெண் எனது அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருக்கிறார். அவர்கள் ஒரு பெண் அமைச்சரை மட்டும் விமர்சிக்கவில்லை. நாட்டில் உள்ள ஒட்டு மொத்த பெண் சக்தியையும் தரம் தாழ்த்திப் பேசிவிட்டனர் என்று ராகுல் காந்தியின் பெயரை குறிப்பிடாமல் குற்றம்சாட்டினார் மோடி.

இதற்கு ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார். அதில், மதிப்புக்குரிய மோடிஜி. நம்முடைய கலாச்சாரம் என்பது பெண்களை வீட்டில் இருந்தே மதிக்கத் தொடங்குவதில்தான் ஆரம்பிக்கிறது. முதலில் நடுங்குவதை நிறுத்திவிட்டு எனது கேள்விக்கு பதில் அளியுங்கள் என்றார் அதிரடியாக.

பிரதமர் மோடி தனது மனைவியை பிரிந்து வாழ்வது குறிப்பிடத்தக்கது. மனைவி யெசோதா பென்னுக்கும் மோடிக்கும் இடையே இந்த பேச்சுவார்த்தையும், உறவும் இல்லாமல் உள்ளது. இதனை குறிப்பிட்டுதான் ராகுல் காந்தி பெண்களை வீட்டில் இருந்தே மதிக்க தொடங்குவதில் தான் நமது கலாச்சாரம் உள்ளது என மோடிக்கு பதில் அளித்ததாக பேசப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version