இந்தியா

நீதித்துறையை கைப்பற்ற முயற்சிக்கும் ஆர்எஸ்எஸ்: ராகுல் காந்தி கடும் தாக்கு!

Published

on

ஆர்எஸ்எஸ் அமைப்பானது பாஜகவின் தாய் அமைப்பு என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆர்எஸ்எஸ் அமைப்பு நாட்டின் பெரும் நிறுவனங்களை கைப்பற்ற முயற்சிப்பதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மையினர் பிரிவு மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை கோழை என கடுமையாக விமர்சித்தார். மேலும் பிரதமர் மோடியை நேருக்கு நேர் ஒரே மேடையில் தேசத்தின் பாதுகாப்பு மற்றும் ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து விவாதம் செய்ய அழைத்து சவால் விட்டார்.

வழக்கத்துக்கு மாறாக ஆவேசமாக பேசிய ராகுல் காந்தி ஆர்எஸ்எஸ் அமைப்பையும் குற்றம் சாட்டினார். நீதித்துறை முதல் தேர்தல் ஆணையம் வரை இந்த நாட்டின் பெரும் நிறுவனங்களைக் கைப்பற்ற ஆர்எஸ்எஸ் முயற்சி செய்கிறது. நாங்கள் ஆட்சியில் இருக்கிற மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் நுழைக்கப்பட்டுள்ள ஆர்எஸ்எஸ் நபர்களை உறுதியாக நீக்குவோம் என்றார்.

Trending

Exit mobile version