இந்தியா

பாட்டி இந்திரா காந்தி செய்தது தவறுதான்: முதல்முறையாக ஒப்புக்கொண்ட ராகுல்காந்தி!

Published

on

தனது பாட்டியும் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அமல்படுத்தியது தவறுதான் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி முதல் முறையாக மனம் திறந்து கூறியுள்ளார்.

இந்தியாவில் இந்திராகாந்தியின் ஆட்சியில் நெருக்கடி நிலை ஏற்பட்டது என்பதும் அதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் சமீபத்தில் மாணவர்களுடனான உரையாடல் செய்தபோது இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ராகுல் காந்தி ’நெருக்கடி நிலை தவறுதான் என்றும், நெருக்கடி நிலையை எனது பாட்டி இந்திரா காந்தி பயன்படுத்தியது நிச்சயம் பிழையானது என்றும் தெரிவித்தார்.

ஆனால் அதே நேரத்தில் இந்திரா காந்தி அமல்படுத்திய நெருக்கடி நிலைக்கும் தற்போதைய காலத்திற்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்று கூறியுள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்லும் ஜனநாயக அமைப்புகளை காங்கிரஸ் கட்சியை கைபற்றவில்லை என்றும் ஜனநாயக அமைப்புகள் தன்னிச்சையாக இயங்க அனுமதிக்கப்பட்டனர் என்றும் கூறினார்.

ஆனால் தற்போது ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர், ஜனநாயக அமைப்புகளை தன்னிச்சையாக செயல்பட விடாமல் சீர்குலைவு செய்து வருவதாகவும் ஆர்.எஸ்.எஸ் ஜனநாயக அமைப்புகளை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர் என்றும் தற்போது அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை தான் இந்தியாவில் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

seithichurul

Trending

Exit mobile version