தமிழ்நாடு

ராகுல் விவகாரம் கருத்து சொல்ல ஒன்றுமில்லை: தினகரன் விளக்கம்!

Published

on

பாஜக தொடர்ந்த வழக்கில் குஜராத்தின் சூரத் நீதிமன்றம் அதிரடியாக ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததையடுத்து ராகுல் காந்தி எம்.பி பொறுப்பில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இது தேசிய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் டிடிவி தினகரன் தனது விளக்கத்தை கூறியுள்ளார்.

#image_title

ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ராகுல்காந்தியின் எம்.பி பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்து உள்ளது.

இந்நிலையில், ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தது ஜனநாயக படுகொலைக்கு இணையானது, இவ்வளவு அவசரமாக இப்படியொரு தீர்ப்பு வரக்காரணம் என்ன என்று பலரும் கூறிவரும் நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திருச்சியில் செய்தியாளர் சந்திப்பில் இந்த விவகாரம் குறித்து பேசினார். அப்போது, கடந்த 2013-ல் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தத்தால் அரசியல் ரீதியான பழிவாங்கும் நடவடிக்கைகள் இருக்கலாம் என கூறப்பட்டது.

ஒருவர் ஒரு பதவியில் இருக்கும் போது அவரது பதவி பறிபோனால் மேல்முறையீடு செய்து இறுதி தீர்ப்பு வரும் வரை அவர் அந்த பதவியில் இருக்கலாம் என்பதை ராகுல் காந்தி ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் அந்த சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டது. ராகுல் காந்தி கொண்டு வந்த சட்டம் இன்றைக்கு அவரையே பாதித்துள்ளது. இதில் கருத்து சொல்ல ஒன்றும் இல்லை என டிடிவி.தினகரன் கூறினார்.

Trending

Exit mobile version