இந்தியா

ராகுல்காந்தி டுவிட்டர் பக்கத்திற்கு சிக்கலா? தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு கடிதம்!

Published

on

தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு அமைப்பின் நிர்வாகம் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள புகைப்படத்தை நீக்கவேண்டும் என புகார் கடிதம் அனுப்பி இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 9 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

இதனை அடுத்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோர்களை தனது காருக்குள் அழைத்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். இது குறித்த வீடியோ மற்றும் புகைப்படம் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது. சிறுமியின் பெற்றோர் கண்ணீர் விட்டு கதறி அழுத போது அவர்களை கட்டிப்பிடித்து கொண்டு ஆறுதல் கூறிய வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலானது \\

இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர் புகைப்படத்தை ராகுல்காந்தி பதிவிட்டதற்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ராகுல்காந்தியின் டுவிட்டர் பதிவை நீக்க வேண்டும் என்றும் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை மூன்று நாட்களுக்குள் டுவிட்டர் நிர்வாகம் அனுப்ப வேண்டும் என்றும் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு அமைப்பு கடிதம் எழுதியுள்ளது. இந்த கடிதத்திற்கு டுவிட்டர் நிர்வாகம் என்ன பதில் நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

இந்த நிலையில் டெல்லியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகைப்படத்தை ராகுல்காந்தி வெளியிட்ட நிலையில் அந்த புகைப்படமும் வீடியோவும் மிகப்பெரிய அளவில் நாடு முழுவதும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version