இந்தியா

செல்போனுக்குள் வெடிவைத்த மோடி: எதிர்கட்சி செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தி ஆவேசம்

Published

on

தேசிய அளவில் பெகாசஸ் உளவு விவகாரம் பூதாகரமாகி வருகிறது. இதையொட்டி நாட்டின் எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. அதன் உச்சமாக இன்று டெல்லியில் எதிர்கட்சித் தலைவர்கள் அனைவரும் காங்கிரஸின் ராகுல் காந்தி தலைமையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

14 எதிர்கட்சிகள் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்துப் பெகாசஸ் விவகாரம் குறித்துப் பேசின. ‘மொத்த எதிர்கட்சியும் இங்கு கூடியுள்ளது. பெகாசஸ் உளவு செயலியை இந்திய அரசு வாங்கியதா, அதை சில நபர்களின் போன்களில் பதிய வைத்ததா என்று மட்டும் தான் நாங்கள் ஒன்றிய அரசிடம் கேட்கிறோம்.

அது குறித்து விவாதம் நடத்த முடியாது என்று அரசு சொல்கிறது. ஏன் இது குறித்துப் பேசக் கூடாது. நாடாளுமன்றத்தில் எங்கள் குரல்வலை நெரிக்கப்பட்டு உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, எங்கள் செல்போன்களில் வெடிகுண்டு வைத்து உள்ளார். இது குறித்து நாங்கள் பேசக் கூடாதா? விவாதம் நடத்தக் கூடாதா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Trending

Exit mobile version