இந்தியா

பாஜகவுக்கு டஃப் கொடுக்கும் ராகுல்; நெல்லையப்பர் கோயிலில் சாமி தரிசனம்!

Published

on

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் அவர் இன்று திருநெல்வேலி மாவட்டம் சென்று, பல்வேறு பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசி வருகிறார். தன் பிரச்சாரத்தின் போது அவர், நெல்லை நகரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அது குறித்தான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 

கூட்டங்களில் ராகுல் காந்தி பேசியதாவது:-

தமிழகம் சிரித்தால் நானும் சிரிப்பேன், மகிழ்வேன். தமிழக முதல்வரை ஊழல் மூலம் கட்டுக்குள் கொண்டு வந்ததைப் போல,தமிழக மக்களையும் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி நினைக்கின்றார். தமிழக முதல்வர் தமிழ்  மக்களுக்கு தான் அடிபணிய வேண்டுமே தவிர மோடிக்கு அல்ல. தமிழக முதல்வர் தமிழ் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப நாட்டை ஆள வேண்டும். அவர் மோடிக்கு அடிபணிந்திருக்கக் கூடாது. தமிழக மக்களை மதிக்கும்படியான அரசு உருவாக நாங்கள் உங்களுக்கு உதவியாக இருப்போம்.

கல்வியானது எல்லாருக்கும் கிடைக்க வேண்டும். அது பணக்காரர்களுக்கு மட்டுமானது அல்ல. நாம் ஒன்றாக சேர்ந்து ஒரு புதிய திசையை, ஒரு புதிய பாதையை தமிழகத்திற்கு காண்பிப்போம். மேலும் தமிழக இளைஞர்களின் முழு திறனையும் பயன்படுத்தி நாட்டின் பிற பகுதிகளுக்கும் நல்வழி காட்டுவோம்.

சீன உற்பத்தியின் சவாலை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றால் அது சிறு மற்றும் நடுத்தர வணிகர்களை பெருக்குவதன் மூலம் தான் நடைபெறும். இந்த நாட்டில் வேர்வையும், உழைப்பையும் மனதையும் செலுத்தி வேலை செய்பவனுக்கு எதுவும் கிடைப்பதில்லை. மாறாக தூங்கி கொண்டு இருப்பவனுக்கு எல்லாம் கிடைக்கின்றது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

seithichurul

Trending

Exit mobile version